1. Home
  2. தமிழ்நாடு

நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நடிகர் தாடி பாலாஜி..!

1

தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலை கட்டி உள்ளது. இந்த நிலையில் ஆவடி அருகே திருமுல்லைவாயில் ஜெயா நகர் நரிக்குறவர்  பகுதிக்கு வந்த நடிகர் தாடி பாலாஜி நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அங்குள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு உபகரணங்கள் குடை மற்றும் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. முன்னதாக தங்கள் பகுதிக்கு வந்த நடிகர் தாடி பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு ஊசிமணி பாசிமணி போன்றவற்றை அணிவித்து மகிழ்ச்சியோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி தளபதிக்காக எப்போ வேணாலும் எங்க வேண்டுமானாலும்  செல்ல தயாராக இருக்கிறேன். தளபதிக்காக உயிர் உள்ளவரை உழைத்துக் கொண்டே இருப்பேன். கட்சி துவங்கியதற்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் தவெகா தலைவர் விஜய் ஏன் வரவில்லை என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்.

ஆவடியில் நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நடிகர் தாடி பாலாஜி

தவெகா தலைவர் விஜய் அவர்கள் வந்தாலே பெரிய கூட்டமாக மாறிவிடும். இதனால்  சட்டம்  ஒழுங்கு பிரச்சனை வரும் அனுமதி பிரச்சனை வரும். இந்த நிகழ்ச்சிக்கே எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. மக்களுக்கு ஒரு நல்லது செய்வதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது.

விஜய் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் 100% கூட்டம் அதிகமாக தான் இருக்கும். 2 மடங்கல்ல 5  மடங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது தான் காரணம்.  கூடிய விரைவில் இது போன்ற கேள்விக்கு நேரில் வந்து த.வெ.க தலைவர் விஜய்  பதில் தருவார் அந்த நாள் விரைவில் வரும் என்றாா்.

ஆவடியில் நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நடிகர் தாடி பாலாஜி

தளபதி என் நெஞ்சில் நிரந்தரமாக வந்துவிட்டார் ,வாடகைக்கு, லீசுக்கு இல்லை எனக் கூறி அவருக்கு நான் உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் இருப்பேன் எனறாா்.  எனக்கு தலைவர் விஜய் அதிகமாக உதவி செய்து இருக்கிறார். விஜய் அவர்கள் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கூறியது போல. என்னுடைய தோலை செருப்பாக தைத்துப் போட்டுக் கொள்ளுங்கள் என கூறி இருப்பார். அது நடக்குமா நடக்காதா என தெரியாது. ஆனால் என்னுடைய தோளில் நான் அவரை சுமப்பேன் என்பது மட்டும் உறுதி.

விஜய் கள அரசியலுக்கு வரவில்லை என எழும்பும் விமர்சனத்திற்கு பதில் அளித்த பாலாஜி  சாதாரன பாலாஜிகே இவ்வளவு கூட்டம் வருகிறது தளபதி வந்தா நினைச்சு பாருங்க. அதனால்  ஜனவரி 27 இல் தளபதி மேற்கொள்ள இருக்கும் சுற்று பயணத்தில் அதிக அளவில் மக்களை சந்திக்க உள்ளார்.ஆவடியில் நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நடிகர் தாடி பாலாஜி

த.வெ.க தலைவர் விஜய் கொடி ஏற்றியது முதல் கட்சி மாநாடு வரை ஆரம்பம் முதலே அவருடன் நான் ஓடிக்கொண்டே இருப்பேன். உழைத்துக் கொண்டே இருப்பேன். எங்கு போய் என்ன செய்ய சொன்னாலும் செய்வேன். 2026 இல் ஈரோடு இடைத்தேர்தல் வர இருக்கிறது ஏன் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர்.

எல்லாமே தலைவர் அவர் முடிவு தான். அவரின் கண் அசைவு வந்தால் வேலை செய்வார்கள். அவர் அமைதியாக இருக்கிறார் எது சொன்னாலும் பூகம்பகமாக வெடிக்கிறது. ஜனவரி 27ல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்த சுற்றுப்பயணம் செல்லும் போது இன்னும் மக்களை சந்திப்பது அதிகமாக இருக்கும். தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு தாடி பாலாஜி கூறிய அறிவுரை.

உறுப்பினர்களாக இருந்தாலும்  நிர்வாகிகளாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒரு நிகழ்ச்சி நடந்தால் உதவியாக இருக்க வேண்டும். தவெக தலைவர் விஜயை  அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இறுதியில் பேசிய தாடி பாலாஜி எவ்வளவு வயசுலும் புஸ்ஸி ஆனந்த் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். அவரும் நன்றாக இருக்க வேண்டும் என பேசினார்.

Trending News

Latest News

You May Like