1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை! தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்!! தற்கொலையை சூசகமாக தெரிவித்த சோகம்!!

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை! தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்!! தற்கொலையை சூசகமாக தெரிவித்த சோகம்!!


மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் , சுஷாந்த் ( 34 ) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹிந்தியில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், கிரிக்கெட் வீரரும் , இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார்.
நடிகரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் மேலாளரான திஷா சேலியன் என்பவர் தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சுஷாந்தின் இறப்புக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் சுஷாந்த், இறந்து போன தனது தாயாருக்கு கைப்பட எழுதிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். 


அந்த கடிதத்தில், அன்பு அம்மா... நீ எப்போதும் என்னுடனே இருப்பதாகவும், நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன் என்றும் உறுதி எடுத்துக் கொண்டோம். என்ன காரணத்திற்காக இப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம் என்று தெரியவில்லை. ஆனால், இருவருமே நமது வார்த்தைகளைக் காப்பாற்றாமல் இருந்து விட்டோம்’ என்று உருக்கமாக கடந்த வாரம் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த் இருந்திருப்பது தெரிந்துள்ளது. அவரது நெருங்கிய நண்பர்கள் எவரேனும் அவருடன் பேசியிருந்தால், அவர் தற்கொலையில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

newstm.in

Trending News

Latest News

You May Like