1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம் ”அமேசான் பிரைமில் ”இருந்து நீக்கம் !!

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம் ”அமேசான் பிரைமில் ”இருந்து நீக்கம் !!


சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் “ஹீரோ”. இந்த திரைப்படத்தில் இவர் பெண் வேடம் ஏற்று நடித்திருந்தது. ரசிகர்களிடத்தில் மிக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் அவர்கள், இந்த திரைப்படத்தின் கதை ‘ஹீரோ’ படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குனர் பிஎஸ் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இதற்கு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குக்கு நீதி வழங்கப்படுவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது இந்த திரைப்படம் ஒரு முன்னணி தனியார் தொலைக் காட்சியிலும் மற்றும் அமேசான் பிரைம் மூலம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது. இந்த திரைப்படம் போஸ்கோ அவர்களின் கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓ டி டி தளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் என கருதி அமேசான் ப்ரைம் லிஸ்டில் இருந்து சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது உள்ள காலக் கட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியாகும் 1 வாரம் முன்பு , இந்த கதை என்னுடையது திரைப்படம் வெளிவரக்கூடாது என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை கேட்கின்றனர். இதுவே தொடர் கதையாகி வருகிறது. இதற்கு ஒரு முடிவு வரவேண்டும் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like