நடிகர் ஜி.வி.பிரகாஷ்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது !!

நடிகர் ஜி.வி.பிரகாஷ்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது !!

நடிகர் ஜி.வி.பிரகாஷ்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது !!
X

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் சமூக அக்கறையுடன் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார்.

ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் , சைந்தவி இருவருக்கும் கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜி.வி.பிரகாஷ் சைந்தவி தம்பதிக்கு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகத்தினர் தொலைபேசியிலும் , குறுஞ்செய்தி மூலமாகவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it