நடிகர் அஜித் அலுவலகத்தில் இருந்து வெளியான கறார் உத்தரவு!! ஆனாலும் தெறிக்க விடும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் அலுவலகத்தில் இருந்து வெளியான கறார் உத்தரவு!! ஆனாலும் தெறிக்க விடும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் அலுவலகத்தில் இருந்து வெளியான கறார் உத்தரவு!! ஆனாலும் தெறிக்க விடும் ரசிகர்கள்!
X

நடிகர் அஜித் , இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் வேலைகள் Corona வைரஸ் காரணத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடை பெற உள்ளது.

பொதுவாக நடிகர்களுக்கு பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பார்கள், ஆனால், இவருக்கு பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பது போல சில முக்கிய திரைப்பிரபலங்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும், வரும் மே 1 ம் தேதி தல அஜித்தின் 49 ஆவது பிறந்த நாள். ரசிகர்கள் தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள் பிறந்த நாளை விட தன்னுடன் உடன் பிறந்த அண்ணன் தம்பி தங்கை அக்கா பிறந்தநாளை விட, தல அஜித்தின் பிறந்தநாளை தான் அவர்களுக்கு தீபாவளி, பொங்கல், Ramzaan, கிறிஸ்துமஸ் எல்லாம். இந்த முறையும் அப்படி கோலாகலமாக கொண்டாட தான் எண்ணியிருந்தார்கள் அஜித் ரசிகர்கள்.

அதனால் ஒரு Common DP ரெடி செய்து பல நட்சத்திரங்கள் மூலம் ரிலீஸ் செய்து சமூக வலைதளத்தை அமர்க்களப்படுத்த ரெடியாக இருந்தனர். ஆனால் இதைக் கேள்விப்பட்ட நடிகர் அஜித், மொத்த உலகமும் கொரோனாவுல திண்டாடி கொண்டிருக்கிறது. ஊரடங்குன்னு யாருமே காசு இல்லாம கஷ்டப்படும் போது  எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா ? என்னைப் போலவே என் ரசிகர்களும் பிறந்த நாளை கொண்டாடகூடாது” என அவரது மேனேஜரும், பி.ஆர்.ஓ.வுமான சுரேஷ் சந்திராவிடம் கறார் காட்டியுள்ளார். 

அதன் பின்னர், நடிகர் ஆதவ் கண்ணதாசனுக்கு அஜித் அலுவலகத்தில் இருந்து அன்பு கட்டளையாக, பெரிய கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என்று தகவல் பறந்திருக்கிறது. இருந்தாலும், இதைப் பற்றியெல்லாம் ரசிகர்கள் கவலைப்படாமல் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இப்போதில் இருந்தே தெறிக்க விட்டு வருகிறார்கள்.  சும்மாவா? அவர்களுக்கு வருடத்திற்கொரு முறை வருகிற தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் கொண்டாட்டங்களைப் போலத் தானே மே முதல் தேதி இருக்கிறது?

வாழ்த்துக்கள் தல!

Newstm.in

Tags:
Next Story
Share it