1. Home
  2. தமிழ்நாடு

அதிரடி! இனி மாஸ்க் அணியாவிட்டால் இவையெல்லாம் கிடையாது!!

அதிரடி! இனி மாஸ்க் அணியாவிட்டால் இவையெல்லாம் கிடையாது!!


கொரோனா பரவல் வேகமாக இருக்கும் சூழலில் இனி பொதுமக்கள் மாஸ்க் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மக்கள் அச்சுறுத்தி வருகிறது. தேர்தல் முடிந்துள்ளதை அடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று ஏற்கனவே தமிழக அரசு கூறியிருந்த நிலையில், கடந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகள் வரும் 10ஆம் தேதி அமலுக்கு வர உள்ளன.

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும், பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் உட்கார்ந்து செல்ல அனுமதி, டாக்ஸியில் ஓட்டுநர் சேர்க்காமல் 3 பேர், ஆட்டோவில் ஓட்டுநர் சேர்க்காமல் 2 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிரடி! இனி மாஸ்க் அணியாவிட்டால் இவையெல்லாம் கிடையாது!!

அதே போல், அதே போல் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க அடிப்படை விஷயங்களான முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் முக்கியம் என கூறப்படும் நிலையில், அதற்கான முக்கிய விதியை பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, இனி மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதன்மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என நம்பலாம்.

newstm.in

Trending News

Latest News

You May Like