"அந்த மாதிரி நடிக்கணும்" : ஆசையை தெரிவித்த ஸ்ருதிஹாசன்!

"அந்த மாதிரி நடிக்கணும்" : ஆசையை தெரிவித்த ஸ்ருதிஹாசன்!

அந்த மாதிரி நடிக்கணும் : ஆசையை தெரிவித்த ஸ்ருதிஹாசன்!
X

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர், பாடகி, நடிகை என்று பன்முகத்திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் பெரிய அளவு சோபிக்கவில்லை என்றாலும் கூட தெலுங்கு படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கிறார். அதே போல் ஹிந்தி படங்களிலும் அவரது கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. 

இடையில் வெளிநாட்டு நபர் ஒருவருடன் காதலில் விழுந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது இவர் தமிழில் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இனிமேல் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டதற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைபடுவதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it