திமுக எம்.எல்.ஏ பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர் !! வீட்டிற்கே சென்று மனைவியை செருப்பால் தாக்க முயன்ற எம்.எல்.ஏ

திமுக எம்.எல்.ஏ பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர் !! வீட்டிற்கே சென்று மனைவியை செருப்பால் தாக்க முயன்ற எம்.எல்.ஏ

திமுக எம்.எல்.ஏ பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர் !! வீட்டிற்கே சென்று மனைவியை செருப்பால் தாக்க முயன்ற எம்.எல்.ஏ
X

மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் மூர்த்தி. சமீபத்தில் இவரின் தூண்டுதலின் பெயரில் , தி.மு.க ஒன்றிய குழு தலைவர் 14 லட்சம் கையாடல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அ.தி.மு.க கவுன்சிலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

மதுரை மாவட்ட கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த மணிமேகலை உள்ளார். இவர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி தூண்டுதலின் பேரில் ஒன்றியத்தில் இருக்கும் பொது நிதியில் இருந்து 14,14,888 ரூபாயை சட்டமன்ற உறுப்பினர் நிதிக்கு மாற்றம் செய்வதாக கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

இது குறித்து அவதார் செய்தி இணையதளத்தில் செய்தி நேற்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த செய்தி பதிவிடுவதில் பா.ஜ.க தமிழக இளைஞரணி செயற்குளு உறுப்பினரும் , மதுரை கோட்ட இளைஞரணி பொறுப்பாளுருமான சங்கரபாண்டிக்கு தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்த தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தி, தன் ரவுடி சகாக்களுடன் அவரின் இல்லத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

சங்கரபாண்டியின் மனைவியை செறுப்பால் அடிக்கவும் முனைந்துள்ளார். இவை அனைத்தும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது. ரவுடித்தனத்தில் ஈடுபட வந்த தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தியிடம் சங்கரபாண்டி எதுவாக இருந்தாலும் போலிஸில் புகாரோ ,

வழக்கோ தொடுக்கவும் அங்கு சட்டபூர்வமாக் தங்களை சந்திக்கிறேன் என்று சொல்லியதால் , உச்சக்கட்ட ரவுடித்தனத்தில் ஈடுபட்டதும் இல்லாமல், தகாத வார்த்தைகளில் சங்கரபாண்டியையும் அவர் மனைவியையும் தி.மு.க ரவுடி கும்பல் பேசியுள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க தமிழக மாநில இளைஞரணி தலைவர் "மதுரை கிழக்கு திமுக எம்எல்ஏ மூர்த்தியின் ஊழல்களை பொதுவெளியில் வெளிச்சம் போட்டு காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்ற எம்எல்ஏ மூர்த்தி தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவரது மனைவியை அடிக்க சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திமுக எம்எல்ஏ வின் இந்த அரஜாகப்போக்கிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில இளைஞரணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன் !!!" என்று தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கையை வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it