வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அபிராமி அந்தாதி! அஷ்டமா சித்திகளும் கை கூடும்!

வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அபிராமி அந்தாதி! அஷ்டமா சித்திகளும் கை கூடும்!

வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அபிராமி அந்தாதி! அஷ்டமா சித்திகளும் கை கூடும்!
X

பாடல்

சென்னியது உன்பொற் திருவடித்தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே

பொருள்

தாமரைப் பூவினை ஒத்த அழகுடன் பொன்னை போன்ற பிரகாசத்துடன் திகழும் உனது திருவடிகளைத் தாங்குவது பணிந்து வணங்கும் எனது தலையே! உனது திருமந்திரம் நிலைபெற்று ஒலித்து கொண்டிருப்பது என் மனமே! செந்தூரம் போன்ற சிவந்த நிறம் கொண்டு அழகு பெண் தெய்வமாகிய உன்னை எப்போதும் நினைத்து கொண்டிருக்கும் உனது அடியார்களுடன் என்னையும் கலந்து கிரமப்படியும் ஒழுக்கத்துடனும் பாராயணம் செய்விப்பது உன்னுடைய பரம ஆகம நெறியே!
அம்பிகையின் அழகை போற்றி அவளுடைய பாதத்தில் நம் மனதை ஆத்ம சமர்ப்பணம் செய்விக்க மந்திர சித்தி பெறலாம் என்பது உறுதி

Tags:
Next Story
Share it