அபிராமி அந்தாதி! மனதை ஒருமுகப்படுத்த உன்னத வழி இது தான்!

அபிராமி அந்தாதி! மனதை ஒருமுகப்படுத்த உன்னத வழி இது தான்!

அபிராமி அந்தாதி! மனதை ஒருமுகப்படுத்த உன்னத வழி இது தான்!
X

பாடல் 12
கண்ணியது உன் புகழ்; கற்பது உன் நாமம்; கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவயத்து; நான்முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!

பொருள்
ஈரேழு பதினான்கு உலகங்களையும் தோன்றச் செய்த அன்னை அபிராமியே! நான் எப்போதும் எண்ணுவது உன் புகழே! பாராயணம் செய்வது உன் திருநாமமே!உள்ளம் உருகி துதி செய்வது தாமரை மலரை போன்ற உன் திருவடிகளையே! பகலும்,இரவும் சேர்ந்திருந்து பக்தி பரவசமூட்டியது உன் அடியவர்கள் கூட்டமே! இத்தனைக்கும் முற்புறவியில் நான் செய்த புண்ணியம் செயல் தான் ஏது? என் அபிராமியே!
இந்தப் பாடலை உள்ளம் உருக பிரார்த்தனை செய்து தியானத்தில் அமர மனம் அம்பிகையின் திருவடிகளில் ஒருமைப்பட்டு நிலைக்கும் என்பது ஐதிகம்

Tags:
Next Story
Share it