ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட வேண்டும் : விஜயபாஸ்கர் காட்டம்!

ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட வேண்டும் : விஜயபாஸ்கர் காட்டம்!

ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட வேண்டும் : விஜயபாஸ்கர் காட்டம்!
X

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியுள்ளது என தெரிவித்தார். முன்னதாக தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்த ஸ்டாலின் ரேபிட் டெஸ்ட் கிட் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களில் கொரோனா குறையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதை விமர்சித்தார். மேலும் கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததால், தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 


இந்நிலையில் ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக தலைவர் மலிவான அரசியலை கைவிட வேண்டும் என்றும், இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it