1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவர்களுக்கு உதவும் ரோபோ கண்டுபிடித்த கோவை இளைஞர்.. செல்போன் மூலம் சளி மாதிரிகள் சேகரிப்பு !

மருத்துவர்களுக்கு உதவும் ரோபோ கண்டுபிடித்த கோவை இளைஞர்.. செல்போன் மூலம் சளி மாதிரிகள் சேகரிப்பு !


ரோபோ மூலம் கொரோனா டெஸ்ட் செய்யும் கருவியை கோவையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிவேகத்தில் பரவி வரும் நோய் தொற்றை தடுக்க அரசுத்துறை போராடி வருகின்றது. இந்த நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மக்களிடம் இருந்து சளி மாதிரிகளை எடுக்கும் ஸ்வாப் டெஸ்ட் செய்ய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் கோவை சேர்ந்த கார்த்தி வேலாயுதம் என்ற இளைஞர்.

இதுகுறித்து கார்த்தி கூறியதாவது: இந்த ரோபோக்காளை பயன்படுத்துவதன் மூலமாக சளி மாதிரிகளை சேகரிக்க கைகளை உபயோக்கிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ரோபோ மாதிகளை சேகரிக்கும்.

இந்த ரோபோ வெறும் ரூ.2 ஆயிரம் ரூபாய் மதிப்புடையது. இதனை அனைத்து மருத்துவமனைகளுக்கும் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளேன்.

ரோபோவில் ஒரு மொபைல் பொருத்தப்படுள்ளது. இந்த மொபைல் மாதிரிகளை சேகரிக்க வரும் மக்கள் எப்படி அமர வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை கொடுக்கும். இந்த மொபைல் மூலம் வீடியோ கால் மூலம் மாதிரி எடுப்பவரிடம் பேச முடியும்.

ஒருவரிடம் இருந்து மாதிரி எடுக்க 2 நிமிடம் எடுக்கும். ஒருவருக்கு மாதிரி சேகரிக்கப்பட்ட பிறகு மற்றொருவருக்கு பாதுகாப்பாக பரிசோதனை செய்யும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்படும். அரசு எங்களை போன்ற இளைஞர்களுக்கு உதவ வேண்டும் அப்போது தான் நமது நாட்டில் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு கார்த்தி கூறினார்.

newstm.in 

Trending News

Latest News

You May Like