சீரியலில் மூழ்கிய பெண்.. வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..

சீரியலில் மூழ்கிய பெண்.. வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..
 | 

சீரியலில் மூழ்கிய பெண்.. வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..

கருத்து வேறுபாட்டில் குடும்பத்தை பிரிந்து தனியார் வாழ்ந்து வந்த பெண், சீரியல் மோகத்தில் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர்புரம் அண்ணா மேலத்தெருவை சேர்ந்தவர் லட்சுமி(43). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனி வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் இரு ஆண் குழந்தைகளும் கணவர் பராமரிப்பில் உள்ளனர். இந்நிலையில் லட்சுமி வசித்து வரும் தனி வீட்டில் டிவி உள்ளிட்ட வசதிகள் அங்கு இல்லை. இதனால் வேலை முடித்து வந்த பின்னாக அருகில் உள்ள உறவினர் வீட்டில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று மாலை வழக்கம் போல் அண்டை வீட்டில் லட்சுமி மும்முரமாக டிவி பார்த்து கொண்டிருந்தார்.

சீரியலில் மூழ்கிய பெண்.. வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..

ஆனால் அதேநேரத்தில் அவரது வீட்டில் தீ பற்றத் தொடங்கியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் லட்சுமியிடம் கூறியுள்ளனர். உடனே வீட்டிற்குள் ஓடிய லட்சுமி, கதவை திறந்து உள்ளே சென்றதும் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, உடல் கருகிய நிலையில் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

சீரியலில் மூழ்கிய பெண்.. வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..

சடலத்தைக் கைப்பற்றிய கீரைத்துறை போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP