1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் புது ரூல்ஸ்!!

சென்னையில் புது ரூல்ஸ்!!


தமிழகத்தில் மக்கள் கொரோனாவை மறந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். மாஸ்க்கா அது எதுக்கு? தனிமனித இடைவெளியா அப்படினா என்ன? என மக்கள் கேட்கும் நிலை உண்டானது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கொரோனாவை கட்டடுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி,

  • பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ. 500 அபராதம்
  • பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
  • தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான விதிகளை மீறினால் ரூ. 500 அபராதம்
  • பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்
  • கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம். 2 முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like