1. Home
  2. தமிழ்நாடு

உலக ஜூனியர் பளுதுாக்குதல்.. இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்..!

உலக ஜூனியர் பளுதுாக்குதல்.. இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்..!


கிரீஸ் நாட்டில் உலக ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. 2 வது நாளான நேற்று, பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப் பிரிவு போட்டி நடந்தது.

இதில், இந்திய வீராங்கனையான சத்தீஷ்கரை சேர்ந்த ஞானேஸ்வரி ‘ஸ்னாட்ச்’ முறையில் 73 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 83 கிலோவும் என மொத்தம் 156 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான ரித்திகா மொத்தம் 150 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான இந்தோனேஷியாவின் வின்டி காண்டிகா அய்சா மொத்தம் 185 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது. முதல் நாளில் இந்திய வீராங்கனை ஹர்ஷதா ஷரத் காருட் (45 கிலோ பிரிவு) தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.

உக்ரைன் மீதான போர் எதிரொலியாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீராங்கனைகளுக்கு இந்த போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா, ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு காரணங்களால் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like