பெண் செய்த தவறு.. கணவன், மகன், மருமகன் சிறையில் அடைப்பு !!

பெண் செய்த தவறு.. கணவன், மகன், மருமகன் சிறையில் அடைப்பு !!

பெண் செய்த தவறு.. கணவன், மகன், மருமகன் சிறையில் அடைப்பு !!
X

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிய அப்பெண்ணின் கணவன், மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் முருகன் (47) - ஷகிலா (40) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன், மகள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷகிலாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிகண்டன் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், கணவன் இல்லாத நேரங்களில் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்பெண்ணின் கணவன் மற்றும் மகனுக்கு தெரிந்தததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

kallakadhal

இது தொடர்பாக பல முறை கண்டித்தும் மணிகண்டன் அப்பெண்ணுடனான பழக்கத்தை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் முருகன், தனது மகன் வினோத் மற்றும் மருமகன் அருண்குமார் ஆகியோருடன் சேர்ந்து கள்ளக்காதலன் மணிகண்டன் வீட்டுக்குச் சென்று கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷகீலாவின் கணவர் முருகன், மகன் வினோத், மருமகன் அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it