எச்சரிக்கை! தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்!!

எச்சரிக்கை! தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்!!

எச்சரிக்கை! தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்!!
X

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

rain

மேலும் ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 01, 02, 03 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்து.

summer 2

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it