1. Home
  2. தமிழ்நாடு

அக்னிபத் வன்முறை.. 18 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்..!

அக்னிபத் வன்முறை.. 18 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்..!


நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த 14-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே பணியில் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் (16-ம் தேதி) 2 ரயில்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

நேற்று (17-ம் தேதி), 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பீகாரில் அக்னிபத் போராட்டத்தின் போது ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் இருந்த 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

புதிய ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்வதால், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில், பீகாரில் போராட்டம் வலுத்து வருவதால், மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 18 மாவட்டங்களுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று பீகாரின் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like