1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசில் காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழக அரசில் காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க..!


தமிழகத்தில் வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல், நகர்பகுதி வளர்ச்சி போன்ற பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாரியத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

காலிப்பணியிட விவரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 11

பணி: Urban Planner /Town Planning Specialist

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி : Degree in Urban Planning or Regional Planning or Geography. மற்றும் 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

பணி: Capacity building/Institutional Strengthening Specialist

காலியிடங்கள்: - 2

கல்வித் தகுதி: Degree or Diploma in the development sector படித்திருக்க வேண்டும். இதோடு, 3 ஆண்டு பணி முன் அனுபவம் அவசியம்.

பணி: MIS Specialist

காலியிடங்கள்: 5

கல்வித் தகுதி: Degree or Diploma in Computer Science/Electronics or MCA/PGDCA படித்திருக்க வேண்டும். இதோடு, 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

பணி: Social Development Specialist

காலிப்பணியிடம்: 1

கல்வித் தகுதி: Degree or Diploma in Social Sciences முடித்திருக்க வேண்டும். இதோடு, 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

பணி: Information, Education and Communication (IEC) Specialist

காலிப்பணியிடம்: 1

கல்வித் தகுதி: Graduate/Diploma in Mass Communication/ Public relations/Journalism/Social Work/Development முடித்திருக்க வேண்டும். மேலும், 3 ஆண்டு பணி முன் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Executive Engineer,
(HFA Cell) Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB),
5, Kamarajar Salai,
Chennai - 600 005

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 22-04-2022

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் 25 ஆயிரம் ரூபாய்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை https://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற இணையதள பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like