1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா..?: சுகாதாரத்துறை செயலர் விளக்கம்..!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா..?: சுகாதாரத்துறை செயலர் விளக்கம்..!


சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இதனால், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? அல்லது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா..? என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அத்துடன், சமூக ஊடகங்களில் ஊரடங்கு தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை.

தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு தொற்று உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை.

மேலும், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like