1. Home
  2. தமிழ்நாடு

ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு..!! அக்னிபாத் திட்டத்தின் வயது வரம்பு 23 ஆக உயர்வு!!

ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு..!! அக்னிபாத் திட்டத்தின் வயது வரம்பு 23 ஆக உயர்வு!!


உலகம் முழுக்க பல நாடுகளில் ராணுவ பணிகள் ஒப்பந்த முறைப்படி செய்யப்பட்டு வருகிறது. அதாவது இளைஞர்கள் பிற பணிகளில் சேரும் முன், தங்கள் இளமை காலத்தில் குறுகிய காலத்தில் ராணுவத்தில் பணியாற்ற முடியும்.

இதன் மூலம் ராணுவத்தில் பணியாற்றிய வேலை அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். அதோடு அந்தந்த நாட்டு அரசுகள் கூடுதல் வீரர்கள் மிக குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்த முடியும்.இதே போன்ற திட்டம்தான் தற்போது இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலம் சேவையாற்ற முடியும். இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேரலாம். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது.

Agnipath

4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவிகித வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை எதிர்த்து பீகார், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரயில்களுக்கு தீ வைப்பு என இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பு எதிரானதும் என்றும், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று கூறி ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் வெடித்து வருவதால், இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

agnipath

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022-ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடஇந்தியாவில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், 17.5 முதல் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டம் இன்றும் தொடரும் பட்சத்தில், சட்டத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like