ஆவின் நிறுவனத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திடீர் ஆய்வு..!!

ஆவின் நிறுவனத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திடீர் ஆய்வு..!!

ஆவின் நிறுவனத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திடீர் ஆய்வு..!!
X

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பால் குளிரூட்டும் அறை, பால்கோவா, வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஒன்றிய அமைச்சர், ஆவின் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின் போது ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, பால்வளத்துறை ஆணையர் பிரகாஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story
Share it