தொடரும் சோகம்! இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 13 தமிழர்கள்!!

தொடரும் சோகம்! இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 13 தமிழர்கள்!!

தொடரும் சோகம்! இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 13 தமிழர்கள்!!
X

இலங்கையிலிருந்து 2 படகுகளில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வாழ்வதற்கு வழியின்றி வேலைவாய்ப்பை இழந்துள்னர்.

ஒருவேளை உணவிற்கே திண்டாடும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு ஈழத்தமிழர்கள் வரத்தொடங்கினர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 11 குடும்பத்தை சேர்ந்த 42 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

sl

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 படகில் கைக்குழந்தையுடன் வந்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஆபத்தான முறையில் கடல் கடந்து தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களை விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

newstm.in


Next Story
Share it