நெல்லை அருகே சோகம்.. அகற்றிய மரம் விழுந்து ஆட்டோவில் வந்த இருவர் பலி..!

நெல்லை அருகே சோகம்.. அகற்றிய மரம் விழுந்து ஆட்டோவில் வந்த இருவர் பலி..!

நெல்லை அருகே சோகம்.. அகற்றிய மரம் விழுந்து ஆட்டோவில் வந்த இருவர் பலி..!
X

திருநெல்வேலி அருகே, சாலை விரிவாக்கத்திற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது மரம் விழுந்ததில் இருவர் பலியாகினர்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அப்போது ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மரத்தை பிடுங்கும் போது சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்தது.

இதில், ஆட்டோ ஓட்டுநர் காதர் மற்றும் பெண் பயணி ரஹ்மத் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்து தொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜே.சி.பி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மரம் விழுந்து இருவர் பலியான சம்பவம் பத்தமடை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it