தலைநகரில் அவலம்.. குழந்தைகள் கண் முன்னே இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

தலைநகரில் அவலம்.. குழந்தைகள் கண் முன்னே இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

தலைநகரில் அவலம்.. குழந்தைகள் கண் முன்னே இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !
X

டெல்லியில் இளம்பெண் ஒருவர் அவரது குழந்தைகள் முன்பே குத்தி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மேற்கு டெல்லி சாகர்பூர் பகுதியில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் சாலையில் நடந்துசென்றுள்ளார். அந்நேரத்தில் திடீரென அங்குவந்த ஒருவர் கத்தியுடன் அப்பெண்ணை பின்தொடர்கிறார். அவர் குழந்தைகளுடன் தப்பியோடும்போது, விரட்டி வந்தவர் குழந்தைகள் முன்பே அந்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதில் பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக்குத்து காயத்துடன் வலியால் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது.

kathikuthu

தகவல் அறிந்துசென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கத்தியால் குத்திய நபர் அந்த பெண்ணின் வீட்டின் அருகில் வசித்தவர் என மட்டும் தெரிய வந்துள்ளது.

மேலும், கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த பெண் ஆரத்தி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்டுபிடித்து கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, என போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it