ராணிப்பேட்டையில் சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

ராணிப்பேட்டையில் சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

ராணிப்பேட்டையில் சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை..!
X

ராணிப்பேட்டை மாவட்டம் காரையில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருடைய மனைவி குணசுந்தரி. இந்தத் தம்பதியின் மகன் ரமேஷ். இவர், அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரமேஷின் தலையில் காயம் ஏற்பட்டு மனநிலை சரியில்லாத நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து ரமேஷ் அவரது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும், மனநிலை சரியில்லாததால் பெற்றோருடன் அவ்வப்போது சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை ரமேஷ் பெற்றோருடன் சண்டை போட்டபோது மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைக் கண்ட பெற்றோர் துக்கம் தாங்க முடியாமல் வீட்டிலேயே இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன், தாய், தந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it