குஜராத்தில் சோகம்..!! 5 வயது சிறுமியை தாக்கி இழுத்துச் சென்ற சிங்கம்.!!

குஜராத்தில் சோகம்..!! 5 வயது சிறுமியை தாக்கி இழுத்துச் சென்ற சிங்கம்.!!

குஜராத்தில் சோகம்..!! 5 வயது சிறுமியை தாக்கி இழுத்துச் சென்ற சிங்கம்.!!
X

குஜராத் மாநிலம், குனாவாவ் வனச் சரகத்துக்கு உள்பட்ட கடயா கிராமத்தில், விவசாயத் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள், அங்குள்ள தண்ணீா் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வந்த ஒரு சிங்கம், சிறுமியைத் தாக்கியது.

இதையடுத்து, அந்தச் சிறுமி அலறினாள். இருந்தாலும் அச்சிறுமியை விடாத சிங்கம் வனத்துக்குள் இழுத்துச் சென்றது. சிறுமி அலறும் சப்தம் கேட்டு ஓடி வந்த அவளின் தந்தை, சிங்கத்தை பின் தொடா்ந்து விரட்டிச் சென்றாா்.

5-yr-old-girl-mauled-to-death-by-a-lion-in-gujarat

சுமாா் அரை கிலோமீட்டா் தூரம் சிறுமியை இழுத்துச் சென்ற சிங்கம், பின்னா் அங்கேயே போட்டுவிட்டு ஓடியது. இச்சம்பவத்தில் சிறுமி உயிரிழந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்ததும், வனத்துறையினா் விரைந்து வந்து, சிங்கத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். வனப்பகுதியில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டன. பின்னர், சிறுமியைத் தாக்கிய ஆண் சிங்கத்தை மயக்க ஊசி செலுத்தி, வனத்துறையினா் பிடித்து விலங்குகள் பராமரிப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Next Story
Share it