இன்று டாஸ்மாக் விடுமுறை.. நேற்று மட்டும் இத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனையா !!

இன்று டாஸ்மாக் விடுமுறை.. நேற்று மட்டும் இத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனையா !!

இன்று டாஸ்மாக் விடுமுறை.. நேற்று மட்டும் இத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனையா !!
X

மே தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் இன்று மூடப்பட்டன.

உத்தரவை மீறி மதுவிற்பனை செய்தால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

wineshop

இந்நிலையில், இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால், குடிமகன்கள் நேற்று கூடுதலாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியதால், மது விற்பனை களைகட்டியது.
அந்த வகையில், இன்று விடுமுறை என்பதால், டாஸ்மாக் மதுபான கடைகளில் நேற்று விற்பனை படுஜோராக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

wineshop

இதில், சென்னையை பொருத்தவரை நேற்று மட்டும் ரூ.52.28 கோடிக்கும், திருச்சியில் ரூ.49.78 கோடிக்கும், சேலத்தில் ரூ. 48.67 கோடிக்கும், மதுரையில் ரூ.54.89 கோடிக்கும், கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மொத்தம் ரூ.252.34 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it