“இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை”! அமைச்சர் சர்ச்சை பேச்சு!!

“இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை”! அமைச்சர் சர்ச்சை பேச்சு!!

“இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை”! அமைச்சர் சர்ச்சை பேச்சு!!
X

இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி மொழி தொடர்பான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எதிர்வினையாற்றி நாடு முழுக்க பேசு பொருளானது.

அதே போல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் அண்மையில் சர்ச்சையில் சிக்கினார். இந்தி தேசிய மொழி என்று அவர் கூறியதால், சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

ajay-devgn

இந்தியாவுக்கு தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது. இந்தி அலுவல் மொழி மட்டும் தான்' என சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் அவரை வறுத்தெடுத்தனர். இதையடுத்து, நாட்டின் அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்கிறேன் என்று அஜய் தேவ்கன் கூறிய பிறகே சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உத்தரபிரதேச மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவில் வாழ விரும்புகிறவர்கள் இந்தி மொழியை கட்டாயமாக நேசிக்க வேண்டும் என்றார்.

Sanjay-nishad-1

இந்தியை நீங்கள் விரும்பாவிட்டால் நீங்கள் வெளிநாட்டவர் என்றோ அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு துணைப் போகிறவர்கள் என்றுதான் அர்த்தம். நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம். அதை யாரும் மறுக்கவில்லை.

நமது அரசியலமைப்பு சட்டமே நமது நாட்டை 'இந்துஸ்தான்' என்றே கூறுகிறது. இந்துஸ்தான் என்பது இந்தி பேசுபவர்களின் நிலம். இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது. அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது குடியேற வேண்டும் என்று கூறினார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it