1. Home
  2. தமிழ்நாடு

பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செய்பவர்கள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய லிங்கங்கள்..!!

பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் செய்பவர்கள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய லிங்கங்கள்..!!

திருவண்ணாமலை கிரிவலம் செய்பவர்கள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய லிங்கங்கள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்.

இந்திரலிங்கம்

கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அக்னிலிங்கம்

இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.

எமலிங்கம்

கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம் எமலிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில்,கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.

நிருதி லிங்கம்

மலை சுற்றும் பாதையில் உள்ள 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

வருண லிங்கம்

ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

வாயுலிங்கம்

இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.

குபேரலிங்கம்

கிரிவலப் பாதையில் 7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.

ஈசான்ய லிங்கம்

கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.

எந்த நாளில் கிரிவலம் சென்றால் என்ன பலன்

வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.

  • திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.
  • செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும்.
  • புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
  • வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும்.
  • சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும்.
  • ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று (18-03-2022) மதியம் 2 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஆகும்.

Trending News

Latest News

You May Like