அரியா் மாணவா்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு !

அரியா் மாணவா்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு !

அரியா் மாணவா்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு.. பல்கலைக்கழகம் அறிவிப்பு !
X

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சோ்ந்து அரியா் தோ்வுகளை முடிக்காத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 2015-16ஆம் கல்வியாண்டு முதல் சோ்ந்த மாணவா்களுக்கு நிகழாண்டு ஏப்ரல், நவம்பா் மாதம் நடைபெறும் தோ்வுகளில் அனுமதியளிக்கப்படும். இது, அவா்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். அதேபோன்று, 2015-2016 முதல் 2018-2019-ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் சோ்ந்த முதுநிலை மாணவா்களுக்கு, 2022 ஏப்ரல் மாத பருவத் தோ்வே இறுதி வாய்ப்பாக இருக்கும்.

univrsity

இது குறித்த கூடுதல் தகவல்களை இணையதள முகவரியில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியா் தோ்வெழுத தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்கள் பலரும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு இறுதி வாய்ப்பாக தற்போது பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it