1. Home
  2. தமிழ்நாடு

வரும் திங்கள்கிழமை முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது கட்டாயம்!!

வரும் திங்கள்கிழமை முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது கட்டாயம்!!


இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Madurai High Court Bench

இதனால் மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், ஜூன் 20-ந் தேதி முதல் உயர்நீதிமன்ற கிளைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

mask

இதுகுறித்து நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறுகையில், “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா 3 அலைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளோம். இதனால் பாதுகாப்பு கருதி ஜூன் 20-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வழக்குகளில் தொடர்பு இல்லாதவர்கள் உயர்நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like