இந்தத் தொகை 10 மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்தத் தொகை 10 மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்தத் தொகை 10 மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
X

தமிழக சட்டப்பேரவையில் நேற்று, 110-வது விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாதாந்திர அமர்வு படி தொடர்பாக குறிப்பிட விரும்புகிறேன்.

கலைஞர், முதல்வராக இருந்தபோது தான், முதன்முதலாக மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வு படி வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்பிறகு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த இந்த அமர்வு படியை உயர்த்தி வழங்கக் கோரி பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது.

இதன் அடிப்படையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வு படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் இந்த அவையில் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அமர்வுத்தொகை உயர்த்தி வழங்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்பெறுவார்கள்” என்றார்.

Next Story
Share it