இவர்களின் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்வு.. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!

இவர்களின் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்வு.. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!

இவர்களின் ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்வு.. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!
X

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக துறைவாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.

அதில், ஒவ்வொரு துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவ்வப்போது புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும். பதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படும்.

தமிழகத்தில், நடப்பாண்டு 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணி முதல் செய்யப்படும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it