நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தம்.. நிதானமாக தப்பிச்சென்ற இளைஞர்.. பகீர் பின்னணி

நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தம்.. நிதானமாக தப்பிச்சென்ற இளைஞர்.. பகீர் பின்னணி

நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தம்.. நிதானமாக தப்பிச்சென்ற இளைஞர்.. பகீர் பின்னணி
X

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பனோரமா தெருவில் வசித்து வருபவர் பவுன்தாய் (50) என்பவர் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தார். இவருக்கு மணிகண்டன் (32), வினோத் (28) ஆகிய இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் வெளியூரில் பணிபுரிந்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக வசித்து வந்த பவுன்தாய் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இதையடுத்து போடி ஜக்கம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு (29) என்பவர், இவரிடம் ஏலச் சீட்டு போட்டு பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

money

இதையடுத்து நேற்றிரவு பவுன்தாய் வீட்டிற்கு பிரபு சென்றுள்ளார் அங்கு பவுன்தான் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து பவுன்தாய் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வெளியே வந்த பிரபுவிடம் அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்களிடம் சமாளித்துவிட்டு அனைவரையும் வீட்டிற்குள் அனுப்பிவிட்டு பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பிறகு வீட்டினுள் சென்று பார்த்தபோது பவுன்தாய் கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.

money

இந்நிலையில், கொலையாளி பிரபு, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக பவுன்தாயை தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தில் வேற ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் பிரபுவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it