பேரறிவாளனை விடுவிப்பதே தீர்வு.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை..!

பேரறிவாளனை விடுவிப்பதே தீர்வு.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை..!

பேரறிவாளனை விடுவிப்பதே தீர்வு.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை..!
X

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவால் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே, சிறப்பு நீதிமன்றத்தினால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின்னர், அவ்வப்போது பரோலில் வெளிவந்த பேரறிவாளன், கடந்த 9 மாதங்களாக பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து வந்தார்.

இதனிடையே, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காததால், பேரறிவாளன் பரோலில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னர் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் தரப்பில் ‘விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவும் எடுக்காமல் உள்ளார்’ என வாதிடப்பட்டது.

இதைக்கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘யார் விடுதலை செய்ய வேண்டும் என்கிற குழப்பம் நீடிப்பதால் பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது..?’ எனக் கேள்வி எழுப்பியதுடன், ‘பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு’ என மத்திய அரசு தரப்பிடம் தெரிவித்தனர்.

Next Story
Share it