1. Home
  2. தமிழ்நாடு

நடுவானில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த விமானி..!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா ?

நடுவானில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த விமானி..!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா ?


இங்கிலாந்து நாட்டின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நோக்கி கடந்த 2-ம் தேதி வெர்ஜின் அட்லாண்டிகா விமான நிறுவனத்தின் ஏ330 ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 300 பேர் பயணித்தனர்.

விமானம் புறப்பட்டு அயர்லாந்துக்கு மேலே அது பறந்துகொண்டிருக்கும்போது, விமானத்தின் சக விமானி, தான் இன்னமும் விமானி பயிற்சியையே முடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

விமானத்தைச் செலுத்தும் விமானியின் சக விமானி, விமானியின் உத்தரவுகளை செயல்படுத்தவும், அவசர நேரங்களில் விமானத்தை தரையிறக்கவும், விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வது போன்ற பணிகளைச் செய்வதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அவர் பொறுப்பானவர் ஆவார்.

இதனை தொடர்ந்து துணை விமானி நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் அறிவிப்பு ஒன்றை வாசித்தார். அதில், நான் உங்கள் துணை விமானி பேசுகிறேன்... நான் இன்னும் விமான பயிற்சியின் இறுதி மதிப்பீட்டில் பங்கேற்கவில்லை. அதில், தேர்ச்சியடையவில்லை’ என்றார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து விமானம் மீண்டும் லண்டன் ஹித்ரோ நகருக்கே திரும்பியது. பின்னர் சில மணி நேர தாமதத்திற்கு பின் தேர்ச்சி பெற்ற அனுபவமுள்ள விமானி, துணை விமானி மூலம் விமானம் மீண்டும் அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

Trending News

Latest News

You May Like