விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை.. மாமனார் வெறிச்செயல் !!

கறி விருந்துக்கு சென்ற மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தரசன் (23). இவருக்கு திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள மங்கலநாயகி புரத்தை சேர்ந்த அரவிந்தியா என்ற பெண்ணை பெற்றோர் திருமணத்துக்கு வரன் பார்த்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பின்னர் தனது வீட்டில் மனைவியுடன் முத்தரசன் வசித்து வந்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 15 ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்தில், முத்தரசன் தனது மனைவியுடன் பங்கேற்று அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மறுநாள் பார்க்கையில் புதுமாப்பிளை முத்தரசன் மாமனார் வீட்டின் அருகே ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவியான புதுப்பெண் கதறிஅழுதார்.
இந்த நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற திருத்துறைப்பூண்டி போலீசார் முத்தரசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாது. அதாவது, முத்தரசனை அவரது மாமனார் ரவிச்சந்திரனே வெட்டிகொலை செய்தது அம்பலமானது.
அதாவது, முத்தரசனை அவரது மாமனார் ரவிச்சந்திரனை பலர் முன்னிலையில் எதிர்த்து பேசியுதாகவும், இதில் ஆத்திரமடைந்த மாமனார் முத்தரசனை வெட்டி கொலை செய்ததும் தெரியவந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in