1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக கொதிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை ! !

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக கொதிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை ! !


இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். வெப்பத்துடன் அனல் காற்றும் வீசுவதால் என்ன செய்து என்று தெரியாமல் திகைத்துபோய் உள்ளனர். தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிஷா மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெயில் அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக கொதிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை ! !

இந்த நிலையில், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உ.பி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பாக ஆரஞ்சு எச்சரிக்கையை அறிவித்துள்ளோம். மே முதல் வாரத்தில், மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என ஐஎம்டி விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக கொதிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை ! !

வடமேற்கு இந்தியாவில் அடுத்த 3 நாள்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை வரை) வெப்பத்தின் அளவு 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிஷா மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் நிலவும் என்றும், இதே போன்ற கடுமையான சூழல் மே முதல் வாரம் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்திலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று வெப்பத்தின் அளவு 43 டிகிரி செல்சியசாக பதிவானது. இது இன்று (வெள்ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக கொதிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை ! !

தமிழ் நாட்டை பொறுத்தவரை திருச்சி, திருத்தணி, வேலூர், மதுரை, கரூர் பரமத்தி, தஞ்சை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

கடுமையான வெயில் நிலவும் ராஜஸ்தானில் 4 மணி நேர மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது, கோடையின் உச்சம் வர உள்ள நிலையில், தற்போதே வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீரிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசாவில், கடுமையான வெயிலின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மே 2-ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன.


newstm.in

Trending News

Latest News

You May Like