1. Home
  2. தமிழ்நாடு

மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!


சென்னையில், படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி சிந்து. வாலிபால் வீராங்கனையான இவர் கடந்த ஆண்டு வீட்டின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரண்டு கால்களின் எலும்புகளும் முறிந்தது.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்துவுக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று (5-ம் தேதி) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்து படுத்த படுக்கையாக எழுதியுள்ளார்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம். கடுமையான நெருக்கடியில் போது தான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.

விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும், கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like