கள்ளக்காதலி வீட்டிலேயே இருந்த தந்தை.. மகன் செயலால் அதிர்ந்த கிராமம் !!

கள்ளக்காதலி வீட்டிலேயே இருந்த தந்தை.. மகன் செயலால் அதிர்ந்த கிராமம் !!

கள்ளக்காதலி வீட்டிலேயே இருந்த தந்தை.. மகன் செயலால் அதிர்ந்த கிராமம் !!
X

கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் கருப்பசாமி (61) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ்(39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். இதில், சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கருப்பசாமிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அதேபகுதியைச் சேர்ந்த விமலா (51) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

kallakadhal

பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கருப்பசாமிக்கு கிடைத்த ஓய்வூதிய பணத்தை தனது குடும்பத்தினரிடம் கொடுக்காமல் கள்ளக்காதலி விமலாவிடம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் புலியகுளம் வந்த மகன் சுரேஷ், கள்ளக்காதலி வீட்டருகே இருந்த தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு உண்டானது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது தந்தை கருப்பசாமியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவானார்.

kallakadhal

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற ராமநாதபுரம் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேசை, தற்போது கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it