மகன் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை!! VIDEO

மகன் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை!! VIDEO

மகன் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை!! VIDEO
X

ஆம்புலன்சில் கொண்டு செல்ல பணம் இல்லாததால், 10 வயது மகனை அவரது தந்தை 90 கி.மீ. துாரம் பைக்கிலேயே எடுத்துச் சென்ற அவலம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

ராஜம்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மலு என்பவரின் 10 வயது மகன், சிறுநீரக கோளாறால் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

தனது மகன் உடலை ஆஸ்பத்திரியிலிருந்து தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்சை அணுகினார். ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

ap1

அந்த அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. அதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மலு தனது மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து உறவினர் ஒருவரை பைக் எடுத்து வர கூறி அந்த பைக்கில் சிறுவனின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவை ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.


newstm.in

Next Story
Share it