தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திய நிறுவனம்!! ஏன் தெரியுமா?

தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திய நிறுவனம்!! ஏன் தெரியுமா?

தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திய நிறுவனம்!! ஏன் தெரியுமா?
X

போதிய தேவை இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதால் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

covishield 2

தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து 20 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. அவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. காலாவதி ஆகிவிடும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டோம் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்த தேதியில் இருந்து 9 மாதங்கள் வரை பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாடு மையம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it