பீஸ்ட் படம் பார்க்க ஊழியர்களுக்கு லீவ் கொடுத்த நிறுவனம்!!

ஊழியர்கள் பீஸ்ட் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக திருப்பூரில் பின்னலாடைநிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. முன்பதிவு தொடங்கியதும் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.
இந்நிலையில், திருப்பூரில் ஒரு பின்னலாடை நிறுவனம் பீஸ்ட் பட வெளியீட்டையொட்டி தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிட் பிரைன் என்ற தனியார் பின்னலாடை நிறுவன ஊழியர்கள் பீஸ்ட் திரைப்படத்தை காண விடுமுறை கேட்டு வந்தனர்.
இந்நிலையில் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து, விடுமுறை அளித்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு 14ஆம் தேதி அந்த நிறுவனம் விடுமுறை அளித்திருந்தது.
எனவே ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு நாள் முன்னதாக விடுமுறை அளித்து டிக்கெட் கொடுத்து பின்னலாடை நிறுவனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏராளமான விடுமுறை விண்ணப்பம் வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பைரசியை தடுக்கும் நோக்கில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்குகிறோம் என்று நிட் பிரைன் நிறுவன நிர்வாகம் கூறியுள்ளது.
newstm.in