தாமதமாக வந்த மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

தாமதமாக வந்த மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

தாமதமாக வந்த மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!
X

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் மல்காபூர் பங்ரா கிராமத்தை சேர்ந்த மணமகனுக்கும், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 22-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்திற்கு, மாலை 4 மணிக்கு சுபமுகூர்த்தம் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மணமகனும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் டி.ஜே. இசைக்கு நடனமாடியபடியே சுமார் 5 மணி நேரம் தாமதமாக மண்டபத்திற்கு வந்தனர்.

இதனால் மணப்பெண் வீட்டாருக்கும், மணமகன் வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, மல்காப்பூர் பங்ரா கிராம அமைதி கமிட்டியினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, 2 தரப்பினரும் மோதிக் கொண்டதற்காக ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். எனினும், மணமகன் குடும்பத்தினரின் செயலால் கோபமடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினர்.

மேலும் அவர், மணமகனின் குடும்பத்தினர் மண்டபத்தில் இருந்து சென்ற பிறகு, மண்டபத்தில் இருந்த உறவுக்கார வாலிபருக்கு தனது மகளை தடாலடியாக திருமணம் செய்து வைத்தார்.

Next Story
Share it