தஞ்சை தேர் விபத்து.. முதல்வர் ஸ்டாலில் நேரில் சென்று அஞ்சலி..!

தஞ்சை தேர் விபத்து.. முதல்வர் ஸ்டாலில் நேரில் சென்று அஞ்சலி..!

தஞ்சை தேர் விபத்து.. முதல்வர் ஸ்டாலில் நேரில் சென்று அஞ்சலி..!
X

தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

தொடர்ந்து, களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக தேர் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் தேர் வந்தபோது, அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
Thanjavur chariot accident, தஞ்சாவூர் தேர் விபத்து | Indian Express Tamil
இந்த விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகிய 11 பேர் பலியாகினர். மேலும், 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, இறந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கினார்.

Next Story
Share it