சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடல்.. மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி..!

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடல்.. மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி..!

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடல்.. மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி..!
X

சென்னை ஐஐடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியின்போது தேசிய கீதத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தேமாதரம் பாடல்களை இசைக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐஐடியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சமஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபோல், 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற 58-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் பாடலை இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் கூறுகையில், ‘சென்னை ஐஐடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியின்போது தேசிய கீதத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தேமாதரம் பாடல்களை இசைக்கலாம்.

அனைத்து இந்திய மொழிகள், கலாச்சாரங்களையும் போற்றுவதே மத்திய அரசின் நிலைப்பாடு’ என்று தெரிவித்துள்ளது.
Next Story
Share it