வன்னியர் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும்.. அன்புமணி ராமதாஸ் பேச்சு..!

வன்னியர் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும்.. அன்புமணி ராமதாஸ் பேச்சு..!

வன்னியர் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும்.. அன்புமணி ராமதாஸ் பேச்சு..!
X

கள்ளக்குறிச்சியில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: “55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் போதும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.

கன்னியாகுமரி, தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்ட மக்களும் பாமகவை விரும்புகின்றனர். ஏனெனில் தகுதி, செயல் திட்டம் என அனைத்தும் பாமகவிடம் உள்ளது. இந்தியாவிலேயே கடந்த 20 ஆண்டுகளாக நிழல்நிதி அறிக்கை வெளியிடும் கட்சி பாமக மட்டும்தான்.

2026 தேர்தலில் கோட்டையில் கொடியேற்றி, நிஜ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஐந்தாண்டு காலம் ஆட்சி கிடைத்தால் சொடக்கு போட்டு தமிழகத்தை முன்னேற்றி விடலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி பாமக 2.0 அரசியல் செய்யப் போகிறது. புதிய யுக்திகள், புதிய வியூகங்கள், புதிய அரசியல், புதிய நிர்வாகிகள். அதனால் தான் மறுசீரமைப்பு நடைபெறுகிறது.

ராமதாஸ் பெற்றுத் தந்த 10.5 சதவீத ஒதுக்கீட்டை உச்ச மற்றும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. தமிழக அரசு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது ஜாதி பிரச்னையல்ல, சமூக நீதி.

தமிழகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Next Story
Share it