தகிக்கும் தமிழ்நாடு.. இன்று அதிகபட்சமாக 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு !!

தகிக்கும் தமிழ்நாடு.. இன்று அதிகபட்சமாக 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு !!

தகிக்கும் தமிழ்நாடு.. இன்று அதிகபட்சமாக 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு !!
X

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 42.3 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மற்ற இடங்களிலும் வெப்பம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான அளவில் வெப்பம் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் தகித்து வருகிறது.

heat

இந்த நிலையில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் இன்று 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், மேலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heat

நாளுக்கு நாள் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியமாகிறது. அதாவது கோடைக்கு ஏற்ற ஆடைகளை அணிவது, பழச்சாறுகளை அருந்துவது, அவசியமற்று பிற்பகல் நேரங்களில் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

newstm.in

Next Story
Share it