போட்டிபோட்டு உதவும் தமிழக அரசியல் கட்சிகள்.. மக்கள் நெகிழ்ச்சி..!

போட்டிபோட்டு உதவும் தமிழக அரசியல் கட்சிகள்.. மக்கள் நெகிழ்ச்சி..!

போட்டிபோட்டு உதவும் தமிழக அரசியல் கட்சிகள்.. மக்கள் நெகிழ்ச்சி..!
X

பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்த தீர்மானம் மீது பேசிய ஓபிஎஸ், மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது முதலமைச்சரின் தனித் தீர்மானத்தின் மூலம் விளங்குகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட முறையில் எனது குடும்ப நிதியாக 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளேன் எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தனர்.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி, கஷ்டப்படும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசியல் முன்வந்திருப்பது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it